210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து உலகளவில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை.!!

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

210 மில்லியன் டன் பால் உற்பத்தி  செய்து உலகளவில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை.!!

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, பால் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

2018-2019 ஆம் ஆண்டில் 6.47 சதவீத வளர்ச்சியுடன் 187.7 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் 2019-2020 ஆம் ஆண்டில் 198.4 மில்லியன் டன்னாக உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும், இது முந்தைய ஆண்டை காட்டிலும் 5. 69 சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவித்தார்.

இதேபோல் 2020-2021ஆம் ஆண்டில் இவை மேலும் 5.81சதவீதம் அதிகரித்து 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் கூறினார். இதில் 2020-2021ஆம் ஆண்டு 9,790 டன் பால் தமிழகத்தில் இருந்து மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.