இலங்கைக்கு இயன்றதை விட அதிக உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது- முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கைக்கு இயன்றதை விட அதிக உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது- முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, இந்தியா இயன்றதை விட அதிக உதவிகளை செய்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

கடும் நிதி நெருக்கடியால் தத்தளிக்கும் இலங்கை அரசுக்கு நட்பு ரீதியாக  காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்தநிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதற்கு நன்றி தெரிவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியா நிதி உதவி மட்டுமல்லாது பிற உதவிகளையும் அதிக அளவில் வழங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் தற்போதைய நெருக்கடிக்கு சீனாவுடனான முதலீடுகள் காரணமில்லை எனவும் விளக்கினார். கடந்த 2 ஆண்டுகளாக இலங்கையின் நிதி நிலை பற்றி அரசு கவனத்தில் கொள்ளவில்லை என குறை கூறிய அவர்,  சீனாவின் கடனை அடைப்பதற்கு தேவையான நிதியும் அரசு கருவூலத்தில் இருந்ததாகவும் கூறினார்.