மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா...!

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா...!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை  இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளதாக ஐநா தரவு பட்டியல் வெளியிட்டுள்ளது.


உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்கியது. ஆனால், தற்போது சீனாவையே பின்னுக்கு தள்ளிய இந்தியா அந்த இடத்தை பிடித்துள்ளது. ஐநாவின் உலக மக்கள் தொகை டேஷ்போர்டு வெளியிட்ட தரவுகளின்படி, உலகின்  அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளதாகவும், தற்போதைய இந்திய மக்கள் தொகை 1.428 பில்லியனை தாண்டியுள்ளதாகவும், இது சீனாவின் 1.425 பில்லியன் மக்களை தொகையை விட சற்று அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை அதிகரிப்பால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இது சவாலான தருணம் என்றும் கூட சொல்லலாம். ஏனென்றால், மக்கள் தொகை அதிகரிப்பால் பல கோடி  மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நிர்பந்தத்தில் மோடி அரசு உள்ளது. அதுமட்டுமல்லாமல், மக்கள் தொகையில் பாதிக்கு மேல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதால், வரும் ஆண்டுகளில் உலகில் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என ஐநா தெரிவித்துள்ளது.

மேலும், 2050 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை சுமார் 1.317 பில்லியனாக குறையும் போது, இந்தியாவின் மக்கள் தொகை 1.668 பில்லியனை தொடும் என்று ஐநா கணித்துள்ளது.