”இந்தியாவை இதயத்தில் இருந்து மட்டுமே அனுபவிக்க முடியும், வார்த்தைகளில் அல்ல” பிரதமர் மோடி!!!

”இந்தியாவை இதயத்தில் இருந்து மட்டுமே அனுபவிக்க முடியும், வார்த்தைகளில் அல்ல” பிரதமர் மோடி!!!

Published on

இந்திய சுற்றுலாவின் புதிய யுகம் தொடங்கியுள்ளது என உலகின் மிகப்பெரிய சொகுசு படகான எம்வி கங்கா விலாசைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

எம்வி கங்கா விலாஸ் என்ற சொகுசுப் படகு, வாரணாசியில் தொடங்கி 51 நாட்களில் 2 நாடுகள், 27 நதிகளைக் கடந்து 3 ஆயிரத்து 200 கிலோமீட்டர் பயணித்து அசாமின் திப்ருகரை அடையவுள்ளது.  18 சொகுசு அறைகளுடன் 36 விருந்தினர்கள் பயணிக்கும் வகையில், அனைத்து அதிநவீன வசதிகளுடன் இப்படகு அமைக்கப்பட்டுள்ளது.  

தொடர்ந்து காணொலி வாயிலாக கங்கா விலாஸ் கப்பல், டெண்ட் சிட்டி உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவை இதயத்தில் இருந்து மட்டுமே அனுபவிக்க முடியும், வார்த்தைகளில் அல்ல எனக் கூறியுள்ளார்.  இந்திய சுற்றுலாவின் புதிய யுகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இன்று ஆயிரம் கோடி ரூபாயில் உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் கிழக்கு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com