இந்தியா- ரஷ்யா இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து...

இந்தியா, ரஷ்யா இடையேயான 2+2 அமைச்சர்கள் உச்சிமாநாட்டில் ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்தியா- ரஷ்யா இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து...

இந்தியா- ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சிமாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா வருகிறார். முன்னதாக இருநாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. 

அதன்படி டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முன்னாதாக, சுஷ்மா ஸ்வராஜ் பவனுக்கு வருகை தந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவிற்கு, ராஜ்நாத் சிங் வரவேற்பு அளித்தார். அப்போது நட்பின் அடையாளமாக  நினைவு பரிசும் வழங்கினார்.  

இந்தநிலையில், இந்தியா, ரஷ்யா இடையே பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி அதிநவீன தானியங்கி ஏஜே-203 ரக ஏவுகணை துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் ஒப்பந்ததில் இரு நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 7 லட்சம் துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன. இதேபோல் கலாஷ்னிகோவ் ரகத்தை சேர்ந்த சிறிய வகை இயந்திர துப்பாக்கிகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்திலும் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.