கர்நாடக பாஜகவில் அதிகரிக்கும் உள்கட்சி மோதல்,.. எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்தா.?

கர்நாடக பாஜகவில் அதிகரிக்கும் உள்கட்சி மோதல்,.. எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்தா.?

கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு எதிராக வெளிப்படையாக சிலர் பேசஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக பாஜகவில் சக்திவாய்ந்த நபர் யார் என்றால் அவர் எடியூரப்பா தான். அங்கு வரும் 2023ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதுவரை தானே முதல்வராக நீடிக்கப் போவதாக கூறியுள்ளார் எடியூரப்பா. ஆனால் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை முதல்வராக்கவேண்டும் என்று பிற பாஜக தலைவர்கள் பேசிவருகின்றனர். இதற்காக டெல்லி பாஜக தலைமையையும் சந்தித்து பேசியுள்ளனர்.

எதிர்ப்பு காரணமாக எடியூரப்பாவை நீக்க பாஜக தலைமை விரும்பினாலும் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாஜக தலைமை தயங்குகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் எடியூரப்பாவின் லிங்காயத்  சமூகத்தினருக்கு கர்நாடகாவில், 17 சதவீத ஓட்டுகள் உள்ளன. ஒருவேளை எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் அவரது சமுதாய ஓட்டுகள் கிடைக்காமல் போகும் என்று பாஜக தலைமை கருதுவதால் இப்போதைக்கு எடியூரப்பா நீக்கப்பட வாய்ப்பில்லை என்றே பாஜக தரப்பில் கூறப்படுகிறது.