அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு... அரசாணை வெளியிட்டது புதுச்சேரி அரசு...
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பான வழக்கில், டெல்லியின் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கைதாகினார். அவரை தொடர்ந்து, முக்கிய அரசியல் புள்ளிகள் அடுத்தடுத்து கைதாகினர்.
இதையும் படிக்க : ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் கார்த்திகி...1 கோடி பரிசு வழங்கி பாராட்டிய முதலமைச்சர்!
இதற்கிடையில் டெல்லி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஏனென்றால், புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் கைதான முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தயாரித்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், டெல்லி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதானி விவகாரம், ராகுல்காந்தி பேச்சு தொடர்பான அமளியால் நாடாளுமன்றம் 7ம் நாளாக மீண்டும் முடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளில் இருந்தே லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக பாஜக அமைச்சர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், பெகாசஸ் செயலியால் தனது செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாகவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி முன்னதாக பேசினார். இந்நிலையில் அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை திசைதிருப்பவே ஆளுங்கட்சி அமளியில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் தான் கூட்டத்தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. முதல் நாளில் இருந்து இதுதொடர்பான வாக்குவாதத்தால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மக்களவை தொடங்கியவுடனேயே, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்கட்சிகள் அவைக்கு முன் சென்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஆளுங்கட்சியினரும் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : உகாதிக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர்...!
அதேபோல் மாநிலங்களவையிலும் ராகுல்காந்தி மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியினரும் ஆளுங்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும், எதிர்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றம் 7ம் நாளாக இன்றும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
கோதாவரி நதியில் குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆந்திரா | காக்கிநாடா சமீபத்தில் கிருஷ்ணலங்கா, யானம் இடையே கோதாவரிதியில் போக்குவரத்து பாலம் உள்ளது. நேற்று மாலை அந்த பாலத்தின் மீது இருந்து இளம் பெண் ஒருவர் கோதாவரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் வீரபாபு இளம் பெண் ஒருவர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீரபாபு உடனடியாக செயலில் இறங்கி கோதாவரி நதியில் குதித்து அந்த பெண்ணை மீட்டார்.
மேலும் படிக்க | உடலை பத்திரமாக மீட்டுத் தரக் கோரி, கலெக்டருக்கு மீண்டும் மனு கொடுத்த குடும்பம்...
இதனை பார்த்த வேறொரு நபரும் கோதாவரியில் குதித்து வீரபாபுவிற்க்கு உதவி செய்தார். அங்கிருந்த படகோட்டிகள் தங்களுடைய படகை அவர்களிடம் கொண்டு சேர்த்து அந்த இளம் பெண்ணை மீட்க உதவி செய்தனர்.
தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் அந்த பெண்ணை யானம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். ஆயுதப்படை காவலர் வீரபாபு செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும் படிக்க | பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு - அமைச்சர் உதயநிதி பேட்டி!
தாய்மை, தியாகம், சுயநலமின்மை போன்ற குணாதிசயங்களை பெற ஆண்கள் தவம் தான் செய்ய வேண்டும். ஆனால் பெண்களுக்கு இவை இயல்பாகவே அமைந்துள்ளன என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மகளிர் தினவிழா சென்னை அடையாறில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாய்மை பெண்கள் அடையும் உச்ச நிலை எனவும், அதற்கு பெரும் தியாகத்தைச் செய்கின்றனர் எனவும் சுயநலமில்லாமல், மன வலிவுடன் குடும்பத்தை நடத்துகின்றனர் பெண்கள் என்றார்.
இதுபோன்ற குணாதிசயங்கள் பெற ஆண்கள் தவம் தான் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் பெண்களுக்கு இக்குணங்கள் இயல்பாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.
உடல் ரீதியான கவர்ச்சியில் ஆரம்பித்தாலும், மனைவி என்பவர் இறுதியில் தாயாகி விடுகிறார் என்பதை ஒவ்வொரு ஆணும் உணரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர்கள் தொழிலில் நிறைய பெண்கள் வர வேண்டும் எனவும், குடும்ப நல நீதிமன்றத்தில் மட்டும் ஆஜராகாமல் குற்ற மற்றும் உரிமையியல் வழக்குகளையும் ஏற்று நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ். குமாரி, மகளிர் தினத்தை ஒட்டி தள்ளுபடி விற்பனை செய்வது வருத்தத்துக்குரியது எனவும், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து பேசினாலும், இன்னும் பெண்கள் பாதிப்பு தொடரவே செய்கிறது என்றார்.
மகளிர் ஆணையத்துக்கு 4,500 மனுக்கள் வந்திருக்கின்றன எனவும், அதில் கிராமங்களில் இருந்து தான் அதிகம் எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: ராணுவ வீரரின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!!!
அருணாசலப்பிரதேசத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்தின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விமான விபத்து:
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - மல்லிகா தம்பதியினரின் ஒரே மகனான ஜெயந்த், கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். 4 ஆண்டுகளுக்கு முன் செல்லஸ்ரீஜா என்பவரை திருமணம் செய்துகொண்டு அருணாலப்பிரதேசத்தில் பணியில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி மாண்டலாவில் ஹெலிகாப்டரில் பயணித்தபோது, பனிமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளானதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், வருவாய்துறையினர், உள்ளிட்டோர் அரசு மரியாதை அளித்தனர்.
அஞ்சலி:
இந்நிலையில் அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அரசு மரியாதையுடன்:
இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஜெயமங்கலம் மயானம் கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நிவாரணம்:
ஜெயந்தின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை...!!