“அடுத்த 25 ஆண்டுகளில்...” தலைப்பில் வெற்றிப்பெற்ற இந்திய மாணவன்...

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடளவில் நடந்த போட்டியில் வெற்றிப் பெற்ற “ஷ்லோக் முகர்ஜீ” யின் டூடுளை கூகுள் அதிகாரப்பூர்வ டூடுளாக மாற்றியுள்ளது.
“அடுத்த 25 ஆண்டுகளில்...” தலைப்பில் வெற்றிப்பெற்ற இந்திய மாணவன்...
Published on
Updated on
1 min read

“அடுத்த 25 ஆண்டில், எனது இந்தியா...” என்ற தலைப்பின் கீழ் வடிவமைக்கப்பட்ட டூடுளுக்கு நாடளவில் ஒரு லட்சத்திற்கும் மேலான பதிவுகள் வந்த நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜீ என்பவர் வெற்றிப் பெற்றுள்ளார்.

இன்று குழந்தைகள் தினம், இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருவதயடுத்து, கூகுள் நிறுவனத்தின் இந்திய செர்வர், தனது டூடுளை 24 மணி நேரத்திற்கு ஒரு வடிவமைப்பில் வெளியிட்டுள்ளது. அதில், ஓரு விஞ்ஞானி, ரோபோவுடன் நட்பு கொள்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் யோக செய்வது, ஆயூர்வேதம் மற்றும் மரம் வளர்வது, பூமியைச் சுற்றி வரும் ராக்கெட் போன்றவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஷ்லோக் குறிப்பிட்டதாவது, “அடுத்த 25 ஆண்டுகளில், இந்திய விஞ்ஞானிகள், மனிதத்தின் வளர்ச்சிக்காக “இகோ ஃப்ரெண்ட்லி ரோபோ”க்களைத் தயாரிப்பார்கள். தொடர் விண்மீன்களுக்கு இடையேயான பயணங்கள் மேற்கொண்டு, அடிக்கடி வின்வெளி பயணங்கள் நடைபெறும். மேலும், யோஜா, ஆயூர்வேதத்தில் வளர்ச்சி அடைந்து, முன்பை விட அதீத வளர்ச்சி அடையும் என்றும், சக்தி வாய்ந்த நாடாகும்” என்பதும் தான் இதன் விளக்கமாகிறது.

இந்த டூடுளானது 24 மணி நேரம் இந்திய மணி கணக்கில் கூகுளின் அதிகாரப்பூர்வ டூடுளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுளின் டூடுளான இந்த “ஆர்ட்டுக்கு” பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com