மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் - வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்!!

அதிகார துஷ்பிரயோகம் செய்து விட்டதாக மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். 

மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் - வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்!!

ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் தவறான தகவல்கள் குறித்த பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் தற்போது வழக்கு பதிவு செய்திருக்கிறது. மத்திய அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி அதிகாரிகள் தரப்பில் வழக்கு போடப்பட்டுள்ளது, இந்த வழக்கின் காரணமாக மத்திய அரசாங்கத்துக்கும் அமெரிக்காவின் சமூக ஊடக நிறுவனம் ட்விட்டருக்கும் இடையில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. 

பல காலங்களாக ட்விட்டரில் பரவி வரும் தவறான பதிவுகள் குறித்த ட்வீட்களை அகற்றுமாறு ட்விட்டரை அரசாங்கம் கேட்டுக் கொண்டது. இந்த உத்தரவை ஜூலை 4 ஆம் தேதிக்குள் ட்விட்டர் பின்பற்றாவிட்டால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சம் எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து ட்விட்டர் நிறுவனத்துக்கு ஜூன் 6 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பட்டு பின்னதாக ஜூன் 9 ஆம் தேதியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த இரண்டு நோட்டீஸ் அனுப்பியும் ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் மூன்றாவது முறையாகவும் ஜூன் 27 ஆம் தேதி மற்றுமொரு நோட்டீஸை ட்விட்டர் நிறுவனத்தினுடைய தலைமை இணக்க அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. 

மேலும் 2021 ஆம் ஆண்டின் பொழுது விவசாய ஆர்வலர்கள் என்ற பெயரில் விவசாய சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வந்த பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் அதனுடன் பத்திரிக்கையாளர்கள் உட்பட 85 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு தகவல் தொழிநுட்ப அமைச்சகம் கேட்டுக்கொண்டது. 

இதற்கு பதிலளித்த ட்விட்டர் நிறுவனம் எங்களுக்கு உத்தரவிடப்பட்ட நடவடிக்கையானது இந்திய சட்டத்தின் அடிப்படையில் எங்கள் கொள்கைக்கு இணக்கமாக இருப்பதாக நாங்கள் நம்பாத காரணத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தது. 

இதனை தொடர்ந்து பேச்சுரிமை தன்மையை பாதுகாப்பதின் அடிப்படையில் செய்து ஊடகங்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர், அரசியல்வாதிகள் ஆகியோரின் கணக்குகள் மீது நாங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதாக இல்லை. காரணம் இவ்வாறு செய்வது இந்தியச் சட்டத்தின் கீழ் கருத்துச் சுதந்திரத்துக்கான அவர்களுடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாக கருதப்படும் என நம்புவதாக ட்விட்டர் பதிலளித்துள்ளது.