நாடு முழுவதும் ரயில்வே பிளாட்பாரம் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

கூட்ட நெரிசலை தவிர்க்க ரூ.10-லிருந்து கட்டணம் ரூ.20-ஆக உயர்வு..!

நாடு முழுவதும் ரயில்வே பிளாட்பாரம் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

இரண்டு மடங்கு உயர்வு:

தொடர் பண்டிகை மற்றும் விழாக் காலத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு, நாளை முதல் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

தொடர் பண்டிகை நாட்கள்:

தமிழகம் உள்பட நாடு முழுவதும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தொடர்ச்சியாக பல்வேறு பண்டிகைகள், விழாக்கள் வரவுள்ளன. இந்த தொடர் பண்டிகை, விழா காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். 

சிறப்பு நடவடிக்கை:

குறிப்பாக, சென்னையில் 2 நாட்கள் முன்பிருந்தே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இக்கூட்டத்தை கட்டுப்படுத்த ஆண்டுதோறும் ரயில்வே நிர்வாகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

நாளை முதல் அமல்:

அந்த வகையில், தொடர் பண்டிகை மற்றும் விழாக் காலத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, நாளை முதல் வரும் ஜனவரி  31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.