கொலை மிரட்டலையும் பொருட்படுத்தாத ராகுல்...மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்தார்!!!

மத்திய பிரதேசத்தில் காலை வைத்தால் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டிருந்த நிலையில் இன்று மத்திய பிரதேசத்தில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.

கொலை மிரட்டலையும் பொருட்படுத்தாத ராகுல்...மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்தார்!!!

மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பயணத்தை முடித்து விட்டு மத்திய பிரதேசத்தில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று மத்திய பிரதேசத்தில் நுழைந்தது.  மகாராஷ்டா-ம.பி., எல்லையில் அமைந்துள்ள போடர்லி கிராமத்தில் இருந்து நடைபயணம் மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்தது.

கலந்து கொண்டவர்கள்:

ராகுல் காந்தி முன்னிலையில் நடைபயணத்தின் கொடி மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான கோவிந்த் சிங்கும் விழாவில் கலந்துகொண்டு கொடியேற்றினார்.

நடைபயண பாதை:

இந்நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நடைபயணம் போடெர்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஜைனாபாத் ஃபதாவில் நிறுத்தப்படும்.

மிரட்டல் கடிதம்:

மகாராஷ்டிராவில் ராகுல் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில் மத்திய பிரதேசத்தின் காவல் நிலையத்தில் மிரட்டல் கடிதம் வந்தது.  அதில், ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் நுழையும் போது மாநிலம் முழுவதும் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் சீக்கிய கலவரத்திற்கு காரணமான கமல்நாத்தும் சுடப்படுவார் எனவும் எழுதப்பட்டிருந்தது. 

மேலும் தெரிந்துகொள்க:   ராஜீவ் காந்தி இடத்திற்கே ராகுலும் அனுப்பப்படுவார்...ராகுலுக்கு வந்த மிரட்டல் கடிதம்...அனுப்பியது யார்?!

மேலும், ராஜீவ் காந்தியின் இடத்திற்கு ராகுலும் அனுப்பப்படுவார் எனவும் இது வெறும் மிரட்டல் அல்ல எனவும் ராகுல் மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்தால் இது நிச்சயம் நடக்கும் எனவும் எழுதப்பட்டிருந்தது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   சர்வாதிகாரி சதாம் உசேனை போல முகத்தை மாற்றியுள்ள ராகுல்....கிண்டலடித்த பாஜக...