டிசி வேணும்னா பணம் கட்டு.. கறார் காட்டிய கல்லூரி முதல்வர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

ஹைதராபாத்தில் நடந்த கோர சம்பவத்தில் 3 பேர் படுகாயம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

டிசி வேணும்னா பணம் கட்டு.. கறார் காட்டிய கல்லூரி முதல்வர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

பணம் கட்டினால் மாற்று சான்றிதழ்: ஹைதராபாத்தில் உள்ள ராமாந்தபூரில் பிரபல நாராயணா கல்வி குழுமத்தின் ஜூனியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 12-ஆம் வகுப்பு முடித்த நாராயண சுவாமி என்ற மாணவர், மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், நிலுவை கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் தருவேன் என கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டி என்பவர் கறார் காட்டியதாக கூறப்படுகிறது. 

முதல்வரை தீயோடு கட்டிப்பிடித்த மாணவர்: ஆனால், பணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த அந்த மாணவர், முதல்வர் அறைக்கு சென்றவுடன், தான் வைத்திருந்த பாட்டிலை திறந்து பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். பின்னர், எதிர்பாராத விதமாக முதல்வரையும் கட்டிப் பிடித்துள்ளார்.

3 பேர் படுகாயம்: அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த தீ விபத்தில் முதல்வர், மாணவர் மற்றும் காப்பாற்ற முயன்றவர் என 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த ராமானந்தபூர் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.