நீ நிலம் தரலானா நான் தண்ணீர் தரமாட்டேன்...ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் முதலமைச்சர்கள்...காரணம் என்ன?!!!

மகாராஷ்டிராவுக்கு ஒரு அங்குல நிலம் கூட தர மாட்டோம் என்று கூறியுள்ள கர்நாடக அரசின் நிலைப்பாடு என்ன என்று சம்புராஜ் தேசாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீ நிலம் தரலானா நான் தண்ணீர் தரமாட்டேன்...ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் முதலமைச்சர்கள்...காரணம் என்ன?!!!

மகாராஷ்டிரா-கர்நாடகா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.  கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பொறுப்பற்ற அறிக்கைகளை விட்டால், அண்டை மாநிலத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் வழங்குவது குறித்து மகாராஷ்டிரா மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று மகாராஷ்டிர அமைச்சர் சம்புராஜ் தேசாய் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு அங்குலம் கூட..:

மகாராஷ்டிராவுக்கு ஒரு அங்குல நிலம் கூட தர மாட்டோம் என்று கூறியுள்ள கர்நாடக அரசின் நிலைப்பாடு என்ன என்று சம்புராஜ் தேசாய் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதாவது கர்நாடக சட்டசபையில் நடந்த எல்லைப் பிரச்னை மீதான விவாதத்தின் போது, ​​எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், அண்டை மாநிலத்துக்கு ஒரு அங்குல நிலம் கூட வழங்கப்பட மாட்டாது என்றும் பொம்மை கூறியிருந்தார். 

ஒரு துளி கூட.. :

பொம்மையின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கர்நாடக அரசின் இத்தகைய கருத்துகளை தாம் கண்டிப்பதாகவும், அரசியல் சாசனப் பதவியில் இருந்துகொண்டு இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது பொம்மைக்கு தகுந்ததல்ல என்றும் தேசாய் கூறியுள்ளார்.  இந்த விவகாரம் நீதித்துறைக்கு உட்பட்டதாக இருக்கும் போது இதுபோன்ற ஆத்திரமூட்டும் வார்த்தைகளை அவர் பயன்படுத்தக் கூடாது என்றும் தேசாய் கூறியுள்ளார்.

எங்கே தொடங்கியது?:

1957 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா-கர்நாடகா மாநிலம் மொழிவாரியாக மறுசீரமைக்கப்பட்டது.  மராத்தி மொழி பேசும் மக்களில் பெரும்பகுதியினர் பெலகாவியில் வசிப்பதால், முந்தைய பம்பாய் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்த பெலகாவிக்கு மகாராஷ்டிரா உரிமை கோருகிறது.  மராத்தி மொழி பேசும் 800 கிராமங்கள் தற்போது கர்நாடகாவின் ஒரு பகுதியாக இருப்பதாக மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது.  மற்றொருபுறம், மகாஜன் கமிஷன் அறிக்கையின்படி மொழிவாரியாக எல்லை நிர்ணயம் செய்வதே இறுதியானது என்று கர்நாடகா அரசு கூறுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பூட்டோ குடும்பம் தொடர்ந்து இந்தியாவை எதிர்க்க காரணமும் பின்னணியும் என்ன?!!!