ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பல் வெடிவிபத்தில் 3 பேர் பலி : இந்திய கடற்படை விசாரணைக்கு உத்தரவு !!

மும்பை கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கடற்படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பல் வெடிவிபத்தில் 3 பேர் பலி : இந்திய கடற்படை விசாரணைக்கு உத்தரவு !!

ஐ. என்.எஸ். ரன்வீர் கப்பலில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் கடற்படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், ஐ. என்.எஸ். ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாகவும், இதில் கடற்படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து உடனடியாக, கப்பல் சிப்பந்திகள் செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,  பெரிய அளவில் கப்பலில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி இந்திய கடற்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இந்த வெடிவிபத்தில் கப்பலின் சிப்பந்திகள் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கடற்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.