ஐஐடி பாம்பே கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..!

ஐஐடி பாம்பே கல்லூரியின் முதுகலை மாணவர்கள், கட்டண உயர்வை கண்டித்து ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

ஐஐடி பாம்பே கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..!

மாணவர்கள் போராட்டம் : 

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி-பாம்பே ) மாணவர்கள், ஜூலை மாத தொடக்கத்தில் முன்மொழியப்பட்ட கட்டணத்தை ஏறக்குறைய 35% உயர்த்தி உள்ளது. நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக மாணவர்கள், போராட்டத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.  

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆளுநர் வாரியத்தால் இந்த உயர்வு எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது என்பதை அதிகாரிகள் எடுத்துக்காட்டி உள்ளனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அதன் நடைமுறை நிறுத்தப்பட்டு, தற்போது உயர்த்தி இருப்பது நியாயமற்றது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் தீவிரம் : 

கட்டண உயர்வு தொடர்பாக  கல்லூரி நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையே இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற விவாதத்தில், கட்டணத்தை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

பின்னர், தற்போது கல்லூரி நிர்வாகம், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மாணவர்கள் அறிக்கை : 

இது குறித்து மாணவர்கள் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்திய கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தாங்கள் கோருகிறோம். 5% வருடாந்திர கட்டண உயர்வை பரிந்துரை செய்யும் ஆளுநர்களுக்கான வாரியம், நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெறவும் தாங்கள் கோருகிறோம். அதன் அடிப்படையில் இந்த குறிப்பிட்ட கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டண உயர்வுக் குழுவில் மாணவர் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர் ஒருவர், "சில படிப்புகளில், கட்டண உயர்வு 40-45% வரை அதிகமாக உள்ளது.  பல குடும்பங்களின் நிதி நிலை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து, தற்போது மீண்டு வரும் நிலையில், இந்த உயர்வு நியாயமற்றது. பல ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதோடு, அவர்களின் உதவித்தொகையிலிருந்து கட்டணத்தையும் செலுத்துகிறார்கள், அதற்கான தொகை இப்போது சில காலமாக அதிகரிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.