நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன் - முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா சூளுரை

நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன் - முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா சூளுரை

நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன் என முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
Published on

கர்நாடகாவில் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக சிவமொக்காவில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்ட போது ஏராளமான பெண்கள் மற்றும் தொண்டர்கள் ஈஸ்வரப்பாவிடம் ராஜினாமா முடிவை கைவிடக்கோரி கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

அவர்களுக்கும் ஆறுதல் கூறி பேசிய முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், தான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன் எனவும் சூளுரைத்தார்.

மேலும் தான் குற்றமற்றவன் என்பது தனக்கு தெரியும் என கூறிய அவர், இருப்பினும் வழக்கின் விசாரணை நடைபெறும் வேளையில் தான் அமைச்சர் பதவியில் இருந்தால் அது விசாரணையை கெடுக்கும் வகையில் அமைந்துவிடும் என்று பலரும் நினைப்பார்கள், அதனால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com