அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் இறுதி வரை எதிர்கொள்வேன் - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்!

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் இறுதி வரை எதிர்கொள்வேன் - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்!

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகப்போவதில்லை என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

நில மோசடி வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அறிவேன் என்றும் தான் அதற்காக மண்டியிடமாட்டேன் எனவும் தெரிவித்து இருந்தார். அதிருப்தி எம்.எல். ஏ. க்கள் என்ன செய்தாலும் தான் கவுகாத்தி செல்ல மாட்டேன் என்றும் சிவசேனா கட்சியுடன்தான் இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமலாக்கத்துறையின்  விசாரணைக்கு இன்று ஆஜராகப் போவதில்லை என்றும் கால அவகாசம் கோரவுள்ளதாகவும், நிச்சயம் விசாரணையை எதிர்கொள்வேன் என்றும் சிவசேனா எம்.பி யான சஞ்சய் ராவத் தெரிவித்தார்.