எத்தனை பண்டிட்டுகளை பாஜக காஷ்மீரில் மறு குடியமர்த்தியுள்ளது? - டெல்லி முதலமைச்சர் கேள்வி

ஆட்சிப்பொறுப்பேற்ற பின் எத்தனை பண்டிட்டுகளை பாஜக காஷ்மீரில் மறு குடியமர்த்தியுள்ளது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

எத்தனை பண்டிட்டுகளை பாஜக காஷ்மீரில் மறு குடியமர்த்தியுள்ளது? - டெல்லி முதலமைச்சர் கேள்வி

காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்களை தொகுத்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உருவக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்துக்கு பல்வேறு மாநில அரசுகளும் வரிச்சலுகை வழங்கியுள்ள நிலையில், டெல்லியில் வரிவிலக்கு அளிக்கும்படி கோரிக்கை எழுந்தது. இதற்கு பதிலளித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 

கடந்த 25 ஆண்டுகளில், காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறியதில் இருந்து, கடந்த 8 ஆண்டுகள் உட்பட 13 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசு உள்ளதாக குறிப்பிட்ட அவர்,  இந்த காலகட்டத்தில் எத்தனை காஷ்மீரி பண்டிட்டுகளின் குடும்பத்தை பாஜக மறு குடியமர்த்தியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.  

காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள கெஜ்ரிவால்,  இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாகவும், காஷ்மீர் பண்டிட்டுகளின் நிலையை நாடு முழுவதும் புரிந்துகொள்ளும் வகையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.