பழுது பார்க்கும் பணியின் போது வீடு இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி, 5 பேர் உயிருடன் மீட்பு!!

டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் வீடு இடிந்த விபத்தில் சிக்கிய 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பழுது பார்க்கும் பணியின் போது வீடு இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி, 5 பேர் உயிருடன் மீட்பு!!

தென்மேற்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 7க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டிடத்தில் பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில்,

திடீரென வீடு இடிந்து விழுந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 6 மீட்பு வாகனங்களுடன் சம்பவ இடத்தை அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் இக்கட்டான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டனர். இந்நிலையில் 2 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில், 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.