சோகத்தில் முடிந்த ஹோலி பண்டிகை.. 4 பேர் பலியான சம்பவம்.. என்ன நடந்தது தெரியுமா?

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை மிக சிறப்பாக கொண்டப்பட்டது.

சோகத்தில் முடிந்த ஹோலி பண்டிகை.. 4 பேர் பலியான சம்பவம்.. என்ன நடந்தது தெரியுமா?

இந்நிலையில், இரு வேறு இடங்களில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்ன வென்றால், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியான சோகம் நிகந்துள்ளது.

முதல் சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 

பிரக்யாராஜ் மாவட்டத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில் நேற்று ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, மது போதையில் இருந்த இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் ராகுல் சொன்கர் (25), சஞ்சய் (35) ஆகியோர் அடித்தும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

இதேபோல், இரண்டாவது சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. 

பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஷோபசார் பகுதியில் ஹோலி பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது, திடீரென இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றிப்போய் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் கத்தி குத்து வாங்கி ஷியாம் (23), ஹிரித்ஹரி (30) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 

இந்த வெவ்வேறு இடங்களில் நடந்த கொலை சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் இருக்கும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.