அதிவேகம்.. சொகுசு காரால் ஏற்பட்ட கோர விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பிய பெண்மணி.. பரபரப்பான சிசிடிவி காட்சி!!

சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரை தாண்டி சென்று மறுபுறம் நின்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குளானது.

அதிவேகம்.. சொகுசு காரால் ஏற்பட்ட கோர விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பிய பெண்மணி.. பரபரப்பான சிசிடிவி காட்சி!!

கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் நேற்று மதியம் சர்வன் என்ற இளைஞர் ஒருவர் குடித்துவிட்டு சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறு மாறாக சென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை தாண்டி சென்று மறுபுறம் நின்று கொண்டிருந்த இரண்டு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த ப்ரீத்தி என்ற பெண்மணி படுகாயமடைந்து உயிருக்காக மருத்துவமனையில் போராடி வருகிறார்.

இந்த விபத்தின்போது சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை தாண்டி சொகுசு கார் செல்லும் போது மயிரிழையில் பெண்மணி ஒருவர் உயிர்தப்பிய காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் சர்வன்னை சரமாரியாக அடித்து உதைத்து பின்பு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.