அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை.. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவிப்பு

அசாம் வெள்ளத்தில் சிக்கி சுமார் 7.11 லட்சம் மக்கள் வீடு உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை.. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மலைப்பாங்கான மாவட்டமான திமா கசாவோவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள மக்களை ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7.11 லட்சம் மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மழை வெள்ளத்தாலும் நிலச்சரிவினாலும் பாதிக்கப்பட்ட கட்டிடங்களிலிருந்து மக்களை மீட்க கூடிய பணிகளை பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.