பீகாரை புரட்டிப்போட்ட கனமழை வெள்ளப்பெருக்கு - இதுவரை 34 பேர் உயிரிழப்பு...!

பீகார் மாநிலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல்தாக்கியதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகாரை புரட்டிப்போட்ட கனமழை வெள்ளப்பெருக்கு - இதுவரை 34 பேர் உயிரிழப்பு...!

பீகார் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாட்னா, கத்தியார்  உள்ளிட்ட 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பலரது வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மின்னல் தாக்கியும், வெள்ள பாதிப்பில் சிக்கியும் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ள பாதிப்பு குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, பயிர்கள் மற்றும் வீடுகள் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.