ஹரியானா: தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள்.. என்னப்பா கடைசில இப்படி இறங்கீட்டீங்க?

ஏழைகளின் உணவைப் பறித்துத் தான் தேசியக் கொடிகளை விற்பனை செய்ய வேண்டுமா? - பாஜக எம்.பி வருண் காந்தி..!

ஹரியானா: தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள்.. என்னப்பா கடைசில இப்படி இறங்கீட்டீங்க?

ஹரியானாவில் தேசியக் கொடியை வாங்கினால் மட்டும் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என மக்களை கட்டாயப்படுத்திய ரேஷன் விநியோகஸ்தரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

75-வது சுதந்திர தினம்: நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக விடுதலை தின அமுதப்பெருவிழா என்ற தலைப்பில் நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது மத்திய அரசு. வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு மாநில அரசுகளும் சுந்ததிர தினத்தை கொண்டாட பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள்: இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழக்கப்படும் என ஒரு ரேஷன் கடையில் மக்களை நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்னல் மாவட்டத்தின் ஹெம்தா கிராமத்தில் உள்ள ஒரு நியாயவிலை கடையில் 20 ரூபாய்க்கு தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அக்கடை ஊழியர்கள் மூலம் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பாஜக எம்.பி காட்டம்: அவ்வாறு தேசியக் கொடி வாங்காத மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தரவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக எம்.பி., வருண் காந்தி, ஏழைகளின் உணவைப் பறித்துத் தான் தேசியக் கொடிகளை விற்பனை செய்ய வேண்டுமா என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

விநியோகஸ்தரின் கருத்தும் அரசின் மறுப்பும்: இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அக்கடையின் ரேஷன் விநியோக உரிமத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அரசின் உத்தரவுப்படியே தேசியக் கொடியை விற்பனை செய்ததாக அக்கடையின் விநியோகஸ்தர் கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அம்மாநில அரசு, மக்கள் விருப்பப்பட்டால் தான் தேசியக் கொடியை விற்பனை செய்ய வேண்டும் என கூறியதாக விளக்கமளித்துள்ளது.

आजादी की 75वीं वर्षगाँठ का उत्सव गरीबों पर ही बोझ बन जाए तो दुर्भाग्यपूर्ण होगा।

राशनकार्ड धारकों को या तिरंगा खरीदने पर मजबूर किया जा रहा है या उसके बदले उनके हिस्से का राशन काटा जा रहा है।

हर भारतीय के हृदय में बसने वाले तिरंगे की कीमत गरीब का निवाला छीन कर वसूलना शर्मनाक है। pic.twitter.com/pYKZCfGaCV
— Varun Gandhi (@varungandhi80) August 10, 2022