தனியாக அறிவிக்கப்படும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி...!

தனியாக அறிவிக்கப்படும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி...!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்க உள்ளது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி:

குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால், பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவு எடுத்துள்ளது.

இதையும் படிக்க: கோவில் நிலங்கள் புறம்போக்கு நிலமா? - இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி!

இதனிடையே, பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் தேதி அறிவிப்பு:

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தனியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.