
புதுச்சேரி போக்குவரத்துத்துறையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வாகன கண்காணிப்பு மையத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நிர்பயா கட்டமைப்பு திட்டத்தின் கீழ், புதுச்சேரி போக்குவரத்துத்துறையில் புதியதாக வாகன கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு மையத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். மேலும் கண்காணிப்பு செயல்முறை குறித்து படக் காட்சி மூலம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரயங்கா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.