மோடிக்கு குட்-பை… ராகுல் பக்கம் சாய்ந்த லிங்காயத்… அந்த ஒரு சம்பவம் இது தான்…

மோடிக்கு குட்-பை… ராகுல் பக்கம் சாய்ந்த லிங்காயத்… அந்த ஒரு சம்பவம் இது தான்…
Published on
Updated on
1 min read

மதத்தின் பெயரால் நாட்டை பிரிவினைப்படுத்தி ஜனநாயக மாண்பை பாஜக கேள்விக்குள்ளாக்குகிறது என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வந்தது.  ஆனால், அந்த விமர்சனமே தற்போது காங்கிரஸ் மீது திரும்பியுள்ளது. அதவாது, பாஜக ஒரு தீவிர மதவாத கட்சி என காங்கிரஸ் விமர்சிக்க,  காங்கிரஸ் கட்சி ஒரு மிதவாத இந்துத்துவாவாதியாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விமர்சித்திருந்தார். ராஜாவின் இந்த விமர்சனத்தின் ஈரம் ஆறுவதற்குள், மிதவாத இந்துத்துவவாதத்தை பின்பற்றுவதாக காங்கிரஸ் கட்சி மீது இதே குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது ஒரு சம்பவம்….
  
சர்ச்சையை உருவாக்கிய ராகுல் நிகழ்ச்சி: 


தேதி கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையாவின் 75வது பிறந்தநாளை கொண்டாட கர்நாடகா சென்றார் ராகுல் காந்தி.  விழாவிற்கு செல்லும் வழியில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு சென்றிருந்ததாக அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அங்கு சென்றிருந்த அவர் மடத்தின் தலைவரை சந்திது ஆசிர்வாதம் பெற்றபோது துறவி ஒருவர் ராகுலிடம் அடுத்த பிரதமர் அவர்தான் என கூறியுள்ளார்.  அப்போது இடைமறித்து பேசிய தலைமை துறவி இது அரசியல் மேடையல்ல என கண்டித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ முருக ராஜேந்திர மடம் லிங்காயத்துகளுக்கு சொந்தமான மடமாகும்.  இங்கிருப்பவர்கள் பாஜகவிற்கு ஆதரவானவர்களாவார்கள்.  ராகுலின் இந்த சந்திப்பு பாஜகவை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.

பாஜக மீதான விமர்சனங்கள்:

துறவி ஒருவரால் அரசை நடத்தும் திறமை உள்ளதா என உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. இதே போலத்தான், நாடாளுமன்றத்தில் தேசிய சின்னமான நான்கு முக சிங்கம் சின்னத்தின் திறப்பு நிகழ்ச்சியின் போது யாகம் பூஜை செய்யப்பட்ட போது அதையும் காங்கிரஸ் கட்சி கடுமையான வார்த்தைகளில் சாடியது. இந்த நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டி சிலர் காங்கிரஸ் கட்சியை ஒரு மிதவாத இந்துத்துவ கட்சியாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com