கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு...! பொதுமக்கள் பாதிப்பு..!

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏனாமின் தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு...!

கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு...! பொதுமக்கள் பாதிப்பு..!

ஆந்திரா,தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த ஜூலை 15-ம் தேதி முதல்  பெய்த கனமழையால் கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆந்திரா மாநிலம், கோதாவரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், ஏனாம் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 7 நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோதாவரி ஆற்றில், தற்போது 15 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏனாமின் தாழ்வான பகுதிகளான பாலயோகி நகர், குரு கிருஷ்ணாபுரம், கோன வெங்கட்ட ரத்னம் நகர், அய்யன்னா நகர், பரம்பேட்டா, பிரான்ஸ்டிப்பா, ராஜுவ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.