இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெண் குழந்தை...

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்-கேரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெண் குழந்தை...

3 திருமணங்களை செய்து கொண்ட 57 வயதான போரிஸ் ஜான்சனுக்கு இது ஆறாவது குழந்தையாகும். முதலாவது மனைவி அலெக்ரா மோஸ்டின்-ஓவனுக்கு குழந்தைகள் இல்லை. இதனையடுத்து, மெரீனா வீலர் என்ற வழக்கறிஞரை, போரிஸ் ஜான்சன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் போரிஸ் ஜான்சன், மூன்றாவதாக 33 வயதான கேரியை திருமணம் செய்துள்ளார். கேரிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குழந்தை பிறந்தது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன்- கேரி தம்பதிக்கு, லண்டன் மருத்துவமனையில் தற்போது இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாக தம்பதியின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.