ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் - இந்தியாவில் 30% பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்!!

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் - இந்தியாவில் 30% பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்!!

6 மாதங்களுக்கு பிறகு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை 30 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று சண்டிகர் கூட உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி வரம்புகள் தற்போது 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்றை கூட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இன்னும் இரு தினங்களில் இந்தியாவில் பெட்ரோல் விலை 30 சதவீதம் அளவுக்கும் மதுபானங்களின் விலை 17 சதவீதம் அளவுக்கும் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.