ஜி-20 உச்சி மாநாடு மக்களின் கவனத்தை திசை திருப்பவே...காங்கிரஸ் கடும் தாக்கு...

ஜி-20 உச்சி மாநாடு மக்களின் கவனத்தை திசை திருப்பவே...காங்கிரஸ் கடும் தாக்கு...
Published on
Updated on
1 min read

டெல்லியில் 2023ல் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாடு, உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே என குற்றஞ்சாட்டியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட தலைமை:

ஜி-20 தலைவர் பதவி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.   பாலியில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி-20 உச்சிமாநாட்டின் முடிவில், இந்தோனேஷியா செல்வாக்குமிக்க ஜி-20 குழுவின் தலைமைப் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தது. டிசம்பர் 1 முதல் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளது. 

பிரதமர் மோடி மீது ஜெய்ராம் ரமேஷ் தாக்கு:

19 முக்கிய பொருளாதார நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணந்து ஜி-20 அமைப்பானது 1999ல் நிறுவப்பட்டது என தகவல் தொடர்புக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.  ஜி-20 அமைப்பின் ஒவ்வொரு உறுப்பு நாடும் 2008 முதல் சுழற்சி அடிப்படையில் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தி வருகிறது.  ஒவ்வொரு உறுப்பு நாடும் தலைமை வாய்ப்பைப் பெறுகிறது.  அதைப்போலவே 2023 ஆண்டிற்கான உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் எனத் தெரிவித்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.  மேலும், இது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இதற்கு முன்பும் இந்தியாவில் இதுபோன்ற உச்சிமாநாடுகள் நடைபெற்றன எனவும் 1983 இல் 100 நாடுகளின் அணிசேரா உச்சி மாநாடு புது தில்லியில் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.  அதனைத் தொடர்ந்து காமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெற்றது எனவும் கூறினார் ஜெய்ராம்.  2023ல் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டை, உண்மையான பிரச்சினைகளில் இருந்து  மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் ஓராண்டுக்குப் பிறகு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக உலகின் மிகப்பெரிய நிகழ்வாக காண்பிக்கவுமே மோடி பயன்படுத்துகிறார் எனப் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com