பத்ம விருதை வாங்க மறுத்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.!!

மத்திய அரசு தனக்கு அளித்துள்ள பத்ம பூஷன் விருதை வேண்டாம் என மறுத்துள்ளார் மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும்  குடிமக்களுக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்தவகையில் மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாம் அந்த விருதினை வாங்கிக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், 90 வயதான பழம்பெரும் பாடகி சந்தியா முகர்ஜியும் தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதினை வாங்க மறுத்துள்ளார். இதனை வளர்ந்து வரும் இளம் தலைமுறை பாடகர்களுக்கு வழங்குவதே பொருத்தமானது எனவும் கூறியுள்ளார்.