கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி பயணம்!!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி பயணம்!!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, இன்று காலை 10 மணி அளவில் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்க செல்லும் அவர் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். அண்மையில், ஆபரேஷன் தாமரை ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிந்தும் எதிர்க்கட்சிகளின் எம்.எல். ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்குவதாக சித்தராமையா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், அவரது தற்போதைய டெல்லி பயணம் கர்நாடக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.