மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்!!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்!!!

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக் குழாய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சுவாசக் குழாய் தொற்று ஏற்பட்டுள்ளாதை மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகரே அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1999 அக்டோபர் 11 முதல் 2004 மே 28 வரை கர்நாடகாவின் 16வது முதலமைச்சராக எஸ்.எம்.கிருஷ்ணா இருந்தார். மகாராஷ்டிராவின் ஆளுநராகவும் இருந்துள்ளார். 2009 முதல் 2012 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்த எஸ். எம். கிருஷ்ணன் 2017-ல் பாஜகவில் இணைந்தார்.