மதுக்கடை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய முன்னாள் முதல்வர் உமாபாரதி!!.. என்ன சம்பவம்?

மத்திய பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் உமாபாரதி மது கடை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கடை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய முன்னாள் முதல்வர் உமாபாரதி!!.. என்ன சம்பவம்?

மத்திய பிரதேசத்தில் சமீபத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வெளிநாட்டு மதுபானங்கள் மீதான கலால் வரியை 13 சதவீதமாக குறைத்து அறிவித்தார். அதே கடைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யவும் மத்திய பிரதேச பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக அரசு இருந்தாலும், இந்த அறிவிப்புக்கு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உமாபாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில்., போபாலில் பர்கேடா பதானி என்ற பகுதியில் மதுபான கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்தும், அந்த மது கடை மூடப்படவில்லை. அதனால் தனது ஆதரவாளர்களுட்ன் அந்த கடைக்கு சென்ற உமாபாரதி கல்வீசித் தாக்குதல் நடத்தினார். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.