நாடாளுமன்றத்தில் முறைப்படி பதவியேற்கும் - புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்!!

நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் முறைப்படி பதவியேற்கும் - புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்!!

நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்பி, பதவிகளுக்கான தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது.

இதில் 41 எம்பி-கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 16 எம்.பி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது.இந்த நிலையில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம். பி-கள் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.