புல்வாமாவில் 5 தீவிரவாதிகள் சுட்டுகொலை... பாதுகாப்புபப் படையினர் அதிரடி...

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

புல்வாமாவில் 5 தீவிரவாதிகள் சுட்டுகொலை... பாதுகாப்புபப் படையினர் அதிரடி...
ஜம்மூ விமான படை தளத்தில் கடந்த மாதம் ட்ரோன் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இதில் ஜம்மு விமான படை தளத்துக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், தீவிரவாதிகளின் ட்ரோன் தாக்குதல் நாட்டின் பாதுகாப்புக்கு புது வித அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை களையெடுக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.
 
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனிடையே புல்வாமாவின் புச்சால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.