பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்  

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சண்டையில், 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.  

ஜம்மு-காஷ்மீரில் அண்மைக்காலமாக பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகளை கண்காணித்து, அவர்களது செயலை முறியடிக்கும் நோக்கில், போலீசார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று பூஞ்சில் உள்ள பீர் பாஞ்சல் பகுதியில், பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது,  தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியோட முயன்றனர். இதற்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த மோதலில் ஒரு அதிகாரி உள்பட 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.