சாலையில் சென்று கொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு...

திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு...

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பேர் ஒரே காரில் திருப்பதிக்கு பயணித்துள்ளனர்.இவர்கள் சென்ற காரானது. சித்தூர் மாவட்டம் ஜித்தேப்பள்ளி சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,சாலையோர தடுப்பில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதில் காரில் பயணித்த குழந்தை உட்பட 5 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.


தகவலறிந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர், மேலும் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.