யானை மிதித்து விவசாயி உயிழப்பு : யானையை பிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்..

யானை மிதித்து விவசாயி உயிழப்பு : யானையை பிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்..

ஆந்திராவில், விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி, யானை மிதித்து உயிரிழந்ததை அடுத்து, அட்டகாசம் செய்யும் யானையை பிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சித்தூர் மாவட்டம் பலமனேர் குடியத்தம் சாலையில் உள்ள விளைநிலத்தை, சுப்பிரமணியம் என்ற விவசாயி காவல் காத்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற யானை ஒன்று, அவரை மிதித்து தாக்கியதில், சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, விளைநிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ஒற்றை யானையை, உடனடியாக பிடிக்க வ்பேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பலமனேர் - தமிழ்நாடு சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.