பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது புகாரா? - மன்னிப்பு கேட்க வேண்டி தீவிரவாத அமைப்பு மிரட்டல்  

பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது. இந்த வெற்றியை, காஷ்மீரில் வசிக்கும் மக்கள் பலர் கொண்டாடியுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவியரும் வெற்றியை கொண்டாடினர். மாணவர்களின் வெற்றி கொண்டாட்டம் குறித்து சிலர் போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு யுஎல்எஃப் என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அதில் புகார் அளித்தவர் குறித்த அனைத்து விவரங்களும் தங்களுக்கு தெரியும் என்றும் அவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்கு உள்ளாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் புலம்பெயர் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் தீவிரவாத அமைப்பு எச்சரித்துள்ளது. அனந்த்நாக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு யுஎல்எஃப் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.