வெள்ள அபாயத்தில் கங்கை, யமுனை ஆறுகள்... கடும் அவதிக்குள்ளாகும் மக்கள்...

கங்கை, யமுனையில் அபாய கட்டத்தை நெருங்கும் வெள்ளம்

வெள்ள அபாயத்தில் கங்கை, யமுனை ஆறுகள்... கடும் அவதிக்குள்ளாகும் மக்கள்...

உத்தரபிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான மாவட்டங்களை  வெள்ளம் சூழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்த கனமழை காரணமாக,  அணைகள் நிரம்பி வருகிறது.

இதனால் பேரழிவை கட்டுப்படுத்த, உபரி நீர்  கங்கை மற்றும் யமுனை நதி உள்ளிட்ட நீர் நிலைகள் வாயிலாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையால் தாழ்வான மாவட்டங்களான பிரயாக்ராஜ், கான்பூர், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து, வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.