தஜிகிஸ்தான் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: காரணம் என்ன?

தஜிகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கா், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் முகமது ஹனீஃப் அத்மரை சந்தித்துப் பேசினாா்.

தஜிகிஸ்தான் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: காரணம் என்ன?

தஜிகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கா், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் முகமது ஹனீஃப் அத்மரை சந்தித்துப் பேசினாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கா், இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் சென்றுள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பே நகரில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் முகமது ஹனீஃப் அத்மருடன், அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக விலகியுள்ள நிலையில், அங்கு தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டு விவகாரம் தொடர்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டம் கூடும் நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பேச்சுவாா்த்தையின் போது, ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும், இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் அரசுப் பிரதிநிதிகளை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திக்க உள்ளாா்.