நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்குமாறு - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தல்..!

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்குமாறு - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தல்..!

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை உயர் மன்றத்தில் உள்ள நூறாண்டு பழமையான மெட்ராஸ் பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர்கள் ராகவன், அழகிரிசாமி, குமார் ராஜரத்தினம் ஆகியோரின் புகைப்படத் திறப்பு விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நீதித்துறை  சீர்திருத்தங்களின் தற்போதைய நிலை - சர்வதேச பார்வை என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஒரு வழக்கு பல ஆண்டுகள் நிலுவையில் இருப்பதால் வழக்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.