முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பாலம்... இந்திய ராணுவத்தில் முறைப்படி இணைப்பு

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுகிய தொலைவு தற்காலிக பால அமைப்பு வாகனங்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டது.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பாலம்... இந்திய ராணுவத்தில் முறைப்படி இணைப்பு
இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாலங்கள் இல்லாத பகுதிகளில், ஆறு மற்றும் சிறிய ஓடைகளை பீரங்கிகள் மற்றும் ராணுவத் தளவாடங்களை எளிதில் நகர்த்துவதற்கு இந்த குறுகிய பாலங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 10 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம்  70 டன் வரையுள்ள எடையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் தற்காலிக பாலங்களை விட அதிக வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும், எத்தகைய நீர்சூழலிலும் பயன்படுத்தும் வகையிலும் இந்த பாலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
டிஆர்டிஓவினால் வடிவமைக்கப்பட்ட இந்த பாலத்தை, எல் அண்டி டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம் நரவனே மற்றும்  டிஆர்டிஓ தலைவர் சதிஷ் ரெட்டி ஆகியோர் இந்த வாகனங்களை இந்திய ராணுவத்தில் முறைப்படி இணைத்தனர். ஆர்டர் கொடுத்த குறுகிய காலத்தில் இத்தகைய தரமிக்க வாகனங்களை தயாரித்து வழங்கிய எல் அண்ட் டி நிறுவனத்துக்கு டிஆர்டிஓ தலைவர் சதிஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.