சலுகைகள் எதுவும் வேண்டாம்... பசவராஜ் பொம்மையின் சலுகைகளை நிராகரித்த எடியூரப்பா...

கர்நாடகா முதல்வர் பசவராஜ் அறிவித்த, அமைச்சருக்கு நிகரான சலுகைகளை எடியூரப்பா நிராகரித்துள்ளார்.

சலுகைகள் எதுவும் வேண்டாம்... பசவராஜ் பொம்மையின் சலுகைகளை நிராகரித்த எடியூரப்பா...

கர்நாடகா முதல்வராக பசவராஜ் பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா எம்எல்ஏ பதவியை மட்டும் வகித்து வருகிறார். 

இதனால் அவர் ஏற்கனவே தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே பங்களாவில் எடியூரப்பா தங்கும் வகையில், அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து அவருக்கு வழங்கப்படும் என பசவராஜ் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அமைச்சருக்கு இணையான அனைத்து சலுகைகளும் எடியூரப்பாவுக்கு கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த சலுகையை திட்டவட்டமாக மறுத்துள்ள எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் கடிதம் எழுதியுள்ளார்.