போர் எதிரொலி.. இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த ஸ்டீல் விலை? கட்டுமானத் தொழிலுக்கு அபாயம்!!

ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலியால் இந்தியாவில் ஸ்டீல் விலை டன்னுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை உயர்ந்தள்ளது.

போர் எதிரொலி.. இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த ஸ்டீல் விலை? கட்டுமானத் தொழிலுக்கு அபாயம்!!

கடந்த பத்து நாட்களாக உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பங்கு வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.

முக்கியமான மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஸ்டீல் உருவாக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான நிலக்கரியில், 85 சதவிகிதம் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாகவும், தென் ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து நிலக்கரியை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன.

இந்நிலையில், உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, வர்த்தகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் நிலக்கரி டன்னுக்கு 500 அமெரிக்க டாலர்கள் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் சுருள்கம்பிகள் மற்றும் டிஎம்டி கம்பிகள் விலையில் 20 சதவீதம் அதிகரித்து டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.