மைசூரில் கோலாகலமாக நிறைவடைந்த தசரா பண்டிகை.. லட்சகணக்கான மக்கள் புடைசூழ.. முதலமைச்சரும் பங்கேற்பு..!

வீதிகளில் அணிவகுத்த யானை படை, மாநில ஆயுதப்படை, தீயணைப்புப் படை, பீரங்கப்பிடை..!

மைசூரில் கோலாகலமாக நிறைவடைந்த தசரா பண்டிகை.. லட்சகணக்கான மக்கள் புடைசூழ.. முதலமைச்சரும் பங்கேற்பு..!

தசரா  கொண்டாட்டம்:

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா, கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு தொடங்கி வைத்தார். 

முதலமைச்சர் பிராத்தனை:

கடந்த 10 நாட்களாக தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் நிறைவுப்பகுதியாக மைசூரில் யானைகள் ஊர்வலம் மற்றும் தீப்பந்த ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டன. அம்பாவிலாஸ் அரண்மனையின் வடக்கு வாயிலில் உள்ள கொடிமர பூஜை செய்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக மக்களின் நல்வாழ்வுக்காக பிராத்தனை செய்தார். 

அம்மனின் ஊர்வலம்:

அதன்பின்னர், அம்பாவிலாஸ் அரண்மனை வளாகத்தின் முன்பகுதியில்  750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாறியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அதனை தொடர்ந்து, அபிமன்யூ என்ற யானை சாமுண்டீஸ்வரி அம்மனை சுமந்தவண்ணம் ஊர்வலமாக சென்றது. 

அலங்கார வாகனங்கள்:

இதனை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மைசூரு மன்னர் யதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் ஆகியோர் மலர் தூவி தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் யானைப்படை, கலைக்குழுக்கள், அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்றன. 

படைகளின் ஊர்வலம் :

யானை ஊர்வலம் தொடங்கப்பட்டதை குறிக்கும் வகையில், 21 குண்டுகள் முழங்கின. இந்த ஊர்வலத்தில் கர்நாடக மாநில ஆயுதப்படை, தீயணைப்புப் படை, பீரங்கப்பிடை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படையினர் வீரநடைப் போட்டு அணிவகுத்து வந்தனர். 4 புள்ளி 5 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பண்ணி மண்டபத்தை அடைந்த யானைகள் ஊர்வலத்தை, லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். 

நிறைவு விழா:

பணிமண்டபத்தில் தசரா விழாவின் நிறைவை குறிக்கும் வகையில், தீப்பந்த ஊர்வலத்தை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார். இதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். 

இதையும் படிங்க: அந்த காலத்தில் இந்து மதமே இல்லை.. நம்மவரே சொல்லிட்டாரு..!

வாகன நெரிசல்:

நிறைவு விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தசரா விழா நிறைவடைந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வாகனங்களில் ஊர் திரும்பியதால், முக்கிய சாலைகளில் கடும் வாகன நெரில் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.