குடியரசு தலைவர் தேர்தலுக்காக - வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு!!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

குடியரசு தலைவர் தேர்தலுக்காக - வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு!!

நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் மத்திய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பனியாற்றியுள்ளார். 

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திரௌபதி முர்மு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பாக நின்று திரௌபதி முர்மு ஆசி பெற்றார். பின் காந்தி சிலைக்கு மலர்களை தூவி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.