காவு வாங்கும் ரம்மி..ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்யாதீர்கள்.. மத்திய அரசு எச்சரிக்கை..!

அறிவுறுத்தலை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு..!

காவு வாங்கும் ரம்மி..ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்யாதீர்கள்.. மத்திய அரசு எச்சரிக்கை..!

உயிரை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி:

ஆன்லைனில் ரம்மி விளையாடி வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, பணத்தை இழப்பதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. 

ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம்:

இதனை தடுத்திடும் வகையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பல்வேறு  தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, ஆன்லை ரம்மி விளையாட்டுக்கும் தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவுக்கு தமிழக அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அவசர சட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசும் தெரிவித்துள்ளது.

விளம்பரங்களுக்கு தடை:

இந்தநிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என தொலைக்காட்சிகள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்கள் மற்றும் பிற இணையதளங்களுக்கு  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.